கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (29) மாலை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் குறித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் முச்சக்கர வண்டியில் சிலாபம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் அடங்குவர்.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
