கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
