கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட சுர்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
