கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 6 km தொலைவில் உள்ள கொஸ்கொட அதுருவெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply