மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலையப் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மக்கள் போராட்ட இயக்கம் ஆகியவை இணைந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும், மாத சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், தோட்ட அடிமை முறைமை நீக்கப்பட வேண்டும், காணி உரிமை வழங்கப்பட வேண்டும் முதலான பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
