விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வியில்- கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே உள்ள தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி, எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்றைய தினம் அகழ்வுப்பணியை முன்னெடுத்தனர்.

எனினும் இந்த அகழ்வு முயற்சியின் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply