இலங்கைக்கான தீர்வை வரி வீதத்தை 20% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா!

இலங்கையிலிருந்து, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35% இலிருந்து 20% ஆகவும், பாகிஸ்தானுக்கு 30% இலிருந்து 19% ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி வீதம் மாற்றப்படவில்லை. அதன்படி 25% ஆகவே நீடிக்கின்றது.

மற்றும் பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50% வரி வீதம் 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும் வரி வீதம் 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்படுகிறது. அதேவேளை லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40% வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply