காணி வரைபடங்களை இன்று முதல் இணையத்தில் பெறலாம்- நில அளவைத் திணைக்களம்!

இன்று (01) முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நேற்றையதினம் இடம்பெற்றது. இதன்போது நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக மேற்கூறியுள்ள விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நில அளவைத் திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக இணையவழி கட்டணம் செலுத்துவதன் மூலம் காணி அளவீட்டு வரைபடங்களை பெறமுடியும்.

காணி உரிமைச் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் நில அளவை வரைபடங்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 2.4 மில்லியன் நில அளவை வரைபடங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது காணி தகவல் சேவைகளை நெறிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply