திருட்டு பொருட்கள் பலவற்றுடன் இரு நபர்கள் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் திருட்டு பொருட்கள் பலவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (31) பிற்பகல் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டில் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத பல கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் முதலானவை கண்டுபிடிக்கப்பட்டன.

மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 64 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 18 கையடக்க தொலைபேசிகள், 02 மடிக்கணினிகள், 01 டேப்லெட் இயந்திரம், 01 பொலிஷர் இயந்திரம், 05 கிரைண்டர்கள் மற்றும் 03 கிரில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply