இஸ்ரேலாக மாறி வரும் அறுகம் குடா- சுற்றுலாப் பயணி கவலை!

இலங்கையின் அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை மற்றும் வணிகங்கள் அதிகரித்து வருவது குறித்து டிஜே டாம் மோனகிள் என்ற சுற்றுலாப் பயணி இன்ஸ்டாகிராமில் காணொளி பதிவு ஒன்றை இட்டு கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில்,

அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.

அறுகம் குடா, இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட டாம் மோனகிள், பல இடங்களில் சிங்களம் அல்லது தமிழுக்குப் பதிலாக ஹீப்ரு மொழி பயன்படுத்தப்படுவதையும், சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் கூட காட்டப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

எபிரேய மொழி அந்த பகுதியில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.

அறுகம் குடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.

இவ்வாறான நிலைமையை கண்டுகொள்ளாமல் இருப்பதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply