ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,645 ரூபாய்க்கும், 2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 658 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
