யாழ்ப்பாணம், நாகவிகாரையில் பிக்கு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வனபதுலே சரணஹர தேரர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த பிக்கு யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளார்.
இதன்படி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தின் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் இன்று (02) காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
