கேகாலை-அவிசாவளை வீதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் இன்று (02) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி கொண்டு தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

