யாழ். சுன்னாகம் பகுதியில் வாள்வெட்டு- ஒருவர் வைத்தியசாலையில்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு சம்பவதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

தனியாக சென்ற ஒருவர் மீது, முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தநிலையில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply