ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் 5 டிங்கி படகுகள் முதலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
