வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எம். ஏ. சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பில் நான் முறையாக கட்சிக்கு அறிவிக்கவுள்ளேன்.

எனினும் எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது.

முதலமைச்சர் பதவிக்கு என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை கட்சி அடையாளம் கண்டால், கட்சியின் முடிவுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply