மலசலகூட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டுள்ளான்.

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்ட பகுதியைச் சேர்ந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவது,

குறித்த சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வராத காரணத்தினால், தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் மிந்து கொண்டு இருந்ததாகவும், அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் மரணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சிறுவன் கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்றுவந்த மாணவன் ஆவான்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply