யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்று மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் செம்மணி பிரதேசத்துக்கு வருகை பாரவைதிருந்ததுடன், மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிப்பிடத்தக்கது.
