கிளிநொச்சி பிராந்தியத்தின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிசிர பெத்தர தந்திரி கொழும்பு தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி பிராந்தியத்திற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா நியமிக்கப்பட்டார்.
அதன்படி இரணைமடுவில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெயசாந்த டீ சில்வா இதற்கு முன்னர் கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிருந்ததுடன், 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
