சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சேவைத் தேவைகளின் அடிப்படையில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
