இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் இலங்கையில் கைது!

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் தலங்கம, அக்குரேகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 20 கைபேசிகள், 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் என்பன கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply