சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரகுமார் எம்.பி!

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிக்கையில்,

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என்ற செய்தியை ஊடகங்களில் பார்த்தேன்.

தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதபுதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள்வரை புதைக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.

எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார்.

ஆகவே அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும். அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply