இலட்சம் பெறுமதியான நகை திருடிய இளைஞன் கைது- வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வவுனிய, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply