உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது- பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க!

உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கொழும்பில் புதிதாகத் திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம்” (City Of Dreams) போன்ற இடங்கள் முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கானவை.

உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளில் நுழைவதைத் தடுக்கும் தெளிவான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது- என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply