பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் தீர்மானம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்ததது.
இந்நிலையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான புதியவரின் பெயரை பரிந்துரைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
