தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பெரியது எதுவும் இல்லை. அது எங்களிடம் இருக்கும் வரை, எந்தவொரு சலுகையையும் நீக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை- என்றார்
கேள்வி – இது நடந்தால், நீங்கள் விஜேராமவை விட்டு வெளியேறி மெதமுலனவுக்குச் செல்ல வேண்டுமா?
பதில் – மெதமுலன விஜேராமவை விட மிகச் சிறந்தது.
கேள்வி – உங்கள் கருத்துப்படி, அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற செயலைச் செய்கிறது?
பழிவாங்க… என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
