சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
அதன்படி இன்றையதினம் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வடக்கு – கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதை வலியுறுத்தியும், வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

