அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்துள்ளார்.
இன்றைய (06) நாடாளுமன்ற அமர்வில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.
