நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) இரவு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களின் இருந்து ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர், அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply