சட்டவிரோத வணிக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டுக்கு வருகை தந்து சட்டவிரோத வணிக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையில் அறுகம்பே, வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் இஸ்ரேலியப் பிரஜைகளின் ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாராந்தம் ஒருமுறை இஸ்ரேலியர்கள் கூடும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் சுற்றுலாப்பயணிகளுக்குரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதனாலேயே தவிர, வேறெந்த விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சுற்றுலாப்பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உரிய அனுமதிபெறாமல், சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டுவரும் வணிகங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply