ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரக்வானை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொளல்ப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 3 கிலோ கிராம் கோர்டைட், 9 கிலோ கிராமுக்கு மேற்பட்ட அம்மோனியா, 15 வோட்டர் ஜெல் என்ற வெடி மருந்து, 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 22 அடி நீளமான நூல் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
