அரசியலமைப்பு சபையானது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றையதினம் கூடவுள்ளது.
அதன்படி இன்று (07) பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடவுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம்பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நேற்று (6) கையளிக்கப்பட்டது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் கிடைத்ததோடு, எதிராக எந்த வாக்குகளும் வழங்கப்படவில்லை.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மட்டுமே பிரேரணைக்கு வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
அதன்படி இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கையொப்பமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கக் கடிதத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ளார்.
அதன்படி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் குறித்த கடிதம் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
