தமிழ் எம்.பிக்கள், ஜனாதிபதி இடையே அவசர சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்றையதினம் (07) சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பிற்கு கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் மற்றும் மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply