‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025’ ஆனது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 3 நாட்கள் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தின் கண்காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத்த திருவிழா ஏற்பாடு செய்வதற்கான நோக்கம்,
சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தையும் பண்பாட்டையும் ஊக்குவித்தல்,
உள்ளூர் மற்றும் சர்வதேச இலக்கியங்களை முன்னிலைப்படுத்தலும் அவற்றை மக்களுக்கு இலகுவில் சென்றடைய செய்தலும்,
வாசகர்கள் புதிய புத்தகங்களை கண்டறியவும், மூத்த எழுத்தாளர்களை சந்திக்கவும், இலக்கிய விவாதங்களில் பங்கேற்கும் ஒழுங்கமைப்புகள்
பல் பண்பாட்டு உரையாடல்களை ஊக்குவித்தல்,
உள்ளூர் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களுக்கு ஆதரவளித்தல்.
ஆகிய விடயங்களை நோக்கமாகக் கொண்டு குறித்த புத்தகத்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழா இடம்பெறவுள்ளது.
அத்துடன் பலதரப்பட்ட பன்மொழி பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒரே வேளையில் சந்திப்பதற்கும், கொள்வனவுகளை மேற்கொள்வதற்கும் இதுவொரு அரிய சந்தர்ப்பமாகும்.
அந்தவகையில் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் நோக்குடன், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

