இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தும் கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மாணவர் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள், இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளையும் உடனடியாக துண்டிக்குமாறு கோரி, இஸ்ரேலைப் புறக்கணிக்கவும்! பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம்! இஸ்ரேலுடன் உறவுகள் வேண்டாம்!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தினர்.

குறித்த போராட்டமானது ஐக்கிய நாடுகள் அமைப்புத் தூதரகம், வெளிவிவகார அமைச்சு, மற்றும் அறிக்கை வெளியிடும் ஊடக நிலையங்களை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர் மற்றும் பொதுமக்கள் முதலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply