நாளை நடைபெறவுள்ள 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (09) காலை இடம்பெற்றது.

இதன் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கருத்து தெரிவிக்கையில்,

பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும்.

இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி 10.45 மணிக்கு நிறைவடையும்.

அதன் பிறகு அரை மணி நேரம் இடைவேளை வழங்கப்படும்.

முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேரம் கொண்டதாகும். குறித்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும்.

பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்கலாம். இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply