காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில்,
காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிப்பதுடன், காசா மக்களை மேலும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன், நிலையான அமைதியை நிலைநாட்ட இராஜதந்திர உரையாடல் மூலம் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
