யாழில் 16 வயது மாணவி உயிரிழப்பு- வெளியான காரணம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

16 வயதுடைய சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்று வந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மாணவிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, கடந்த மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனைகளில் போது குறித்த மாணவி கிருமித் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply