155ம் இலக்க பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்!

வடகொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ம் இலக்க பஸ் சேவை இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை செல்லும் 155ம் இலக்க பஸ் சேவையானது சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

பின்னர் வடகொழும்பு நகர சபை உறுப்பினர் ஏனைய நகரசபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பஸ்கள் குறித்த பகுதியில் இயக்கப்பட்டன.

எனினும் குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக 155ம் இலக்க பஸ் சேவையின் தேவைகள் தொடர்பில் எடுத்து கூற்பட்டதுடன், அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இதன் பயனாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆலோக கருணாரத்ன அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக இன்றையதினம் முதல் 155 ஆம் இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (11) காலை 05.30 மணி முதல் 155 பஸ் சேவையானது மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply