யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது.

வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் குறித்த நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடாத்திய நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கமீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் சம்பவத்தின் போது இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களால் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply