முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் தாக்குதல் நடாத்தப்பட்ட ஐந்து இளைஞர்களில், ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த நபர் கடந்த 09ஆம் திகதி அன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
