இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் அளித்த வாய்மொழி வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இடமாற்ற உத்தரவுகளை செயல்படுத்துதல் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதன் நிறைவேற்றுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
