‘எல்ல வீகென்ட் எக்ஸ்பிரஸ்’  ரயில் சேவை ஆரம்பம்!

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து, பதுளை – எல்லை வரை ‘Ella Weekend Express’ ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சேவையானது நீண்ட தூரப் பயண வசதியை விஸ்தரிக்கும் நோக்கோடு வார இறுதியில் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி குறித்த சேவையானது எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் 17 ஆம் திகதி 1.45 க்கு பதுளையிலிருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply