மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாளை (13) இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2ஆம் கட்ட காற்றாலை கோபுரம் அமைக்கும் திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வு விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாளையதினம் (13) ஜனாதிபதியுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
