மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு- முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு!

மீகொட பகுதியில் இன்று (12) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய சாந்த முதுன்கொடுவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எடிகல பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், காரில் வருகைத்தந்த சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply