முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தது.
இதனை கருத்தில் கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
