புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (13) பிற்பகல் அரசியலமைப்பு சபை கூடியது.
இதன்போதே புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
