குருநாகல் போதனா வைத்தியசாலையில் அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் இன்றையதினம் (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி தகுதியற்ற மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்தமை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக அஜித் திலகரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
