வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் கைது!

இளைஞரொருவருக்கு வௌிநாட்டு ஆசை காட்டி பண மோசடி செய்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர் கைது செய்யப்படும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் கணினிப் பிரிவில் உதவி முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ருமேனியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உதவியாளராக வேலை வாங்கித் தருவதாக கூறி, 2023 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் தன்னை ஏமாற்றி வருவதாக பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அவரிடம் இருந்து 945,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply