கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply